Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிறுவனங்கள் புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும்: நிதியமைச்சர் ஹெங்

சிங்கப்பூர் நிறுவனங்கள், புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டுவது அவசியம் என நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நிறுவனங்கள் புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும்: நிதியமைச்சர் ஹெங்

படம்: GIC and EDB

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் நிறுவனங்கள், புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டுவது அவசியம் என நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

ஊழியர்கள் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் நிறுவனங்களுடையது என்பதை அவர் சுட்டினார்.

சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகளுக்கான மாநாட்டில் அவர் பேசினார்.

அமெரிக்காவின் Silicon Valleyயுடன் ஆசிய நாடுகளுக்குத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாநாடு நடைபெறுகிறது.

இவ்வாண்டின் மாநாடு, நிதித்துறை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய தொழிலுநுட்பத்தில் கவனம் செலுத்தியது.

அமெரிக்க நிறுவனங்கள் ஆய்வுகளின் மூலம் கிடைத்துள்ள தகவல்களைக் கொண்டு செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதைத் திரு. ஹெங் மெச்சினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்