Images
  • Singapore Condemns
    (படம்: Tasnim News/AFP)

சவுதி அரேபியா, ஓமானிய வளைகுடா தாக்குதல்களுக்குச் சிங்கப்பூர் கண்டனம் தெரிவிப்பு

சவுதி அரேபியாவின் அனைத்துலக அபா (Abha) விமான நிலையத்தின்மீதும், ஓமானிய வளைகுடாவில் 2 வர்த்தக கப்பல்கள் மீதும் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துவருவது குறித்து, வெளியுறவு அமைச்சு கவலை தெரிவித்தது.

அனைத்துலகச் சட்டத்திற்கு ஏற்ப அனைத்துக் கடல் வழிகளும் தடையற்றவையாகவும், பாதுகாப்பு மிக்கவையாகவும் இருப்பது கட்டாயம் என, அமைச்சு வலியுறுத்தியது. பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்குமாறும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளுமாறும், அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டது.

நேற்று முன்தினம் அபா அனைத்துலக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, யேமனைச் சேர்ந்த ஹூதி (Houthi) படையினர் பொறுப்பேற்றுக்கொண்டனர். அந்தத் தாக்குதலில் 26 பேர் காயமுற்றனர்.
அதற்கு அடுத்த நாளே ஓமானிய வளைகுடாவில் 2 எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டன.

Top