Images
  • Singapore Cybersecurity
    (படம்: Jeremy Long/ CNA)

இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது: ஆய்வு


சிங்கப்பூரில் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்திருப்பதாக இணையப் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் காட்டின.

இருப்பினும், இன்னும் நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமைப்பு வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது.

அனைத்து இணையக் கணக்குகளுக்கும் இரண்டு கட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 26 விழுக்காடாக இருந்தது.

தனிநபர் திறன்பேசிகளில் பாதுகாப்புச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 53 விழுக்காட்டிலிருந்து 45 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

திறன்பேசிகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோர் பாதுகாப்புச் செயலிகள் அவசியமானவை என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதிகமானோர் அதைப் பதிவிறக்கம் செய்வதில்லை.

கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் இணைய மோசடி போன்ற குற்றங்களுக்கு ஆளாவது குறித்த அக்கறையை வெளிப்படுத்தினர்.

அவர்களுள் 30 விழுக்காட்டினர் மட்டுமே அத்தகைய சூழ்நிலை தங்களுக்கும் நேரக்கூடும் என்று கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

Top