Images
  • sg factory
    (கோப்புப் படம்: Reuters) 

தொடர்ந்து 10 மாதமாக விரிவடைந்துள்ள சிங்கப்பூர்த் தொழிற்சாலைச் செயல்பாடுகள்

சிங்கப்பூரில் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து பத்தாவது மாதமாக விரிவடைந்துள்ளன.

ஏப்ரல் மாதம் PMI எனும் கொள்முதல் நிர்வாகக் குறியீடு 0.1 புள்ளி அதிகரித்து 50.9 ஆகப் பதிவானது.

2018 டிசம்பருக்குப் பின், பதிவான ஆக அதிக கொள்முதல் நிர்வாகக் குறியீடு அது. அப்போது அது 51.1-ஆக இருந்தது.

PMI 50 புள்ளிகளைத் தாண்டினால், உற்பத்திப் பொருளியல் விரிவடைவதாகப் பொருள். அதை விடக் குறைந்தால், உற்பத்திப் பொருளியல் சரிவதாகக் கருதப்படும்.

புதிய கொள்முதல், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் மாத குறியீடு விரிவடைந்தது.

மின்னியல் துறைக்கான PMI குறியீடு 0.1 புள்ளி உயர்ந்து 50.7 ஆனது.

மின்னியல் துறை தொடர்ந்து 9 மாதங்களாக வளர்ச்சி கண்டுள்ளது.   

Top