Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர்ச் சேமிப்பில் சிங்கப்பூரின் அனுபவம் இந்தியாவிற்குப் பெரிதும் உதவக்கூடும்: அமைச்சர் விவியன்

தண்ணீர் சேமிப்பை முக்கியமான ஒன்றாகக் கருதுவதாக இந்தியா அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த அம்சத்தில் சிங்கப்பூரின் அனுபவம் பெரிதும் உதவக்கூடும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தண்ணீர்ச் சேமிப்பில் சிங்கப்பூரின் அனுபவம் இந்தியாவிற்குப் பெரிதும் உதவக்கூடும்: அமைச்சர் விவியன்

(கோப்புப் படம்: Mediacorp)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தண்ணீர் சேமிப்பை முக்கியமான ஒன்றாகக் கருதுவதாக இந்தியா அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த அம்சத்தில் சிங்கப்பூரின் அனுபவம் பெரிதும் உதவக்கூடும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தண்ணீரின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் புரிந்துகொண்ட அளவுக்கு வேறு எந்த நாடும் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.

வளரும் ஆசியான் சந்தைகளின் வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு சிங்கப்பூர் தொடர்ந்து நல்ல தளமாக இருந்துவருவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

இன்று நடைபெற்ற சிங்கப்பூர்-இந்திய மாநாட்டில் டாக்டர் பாலகிருஷ்ணன் அதனைத் தெரிவித்தார்.

RCEP எனும் விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்படிக்கையைப் பற்றியும் மாநாட்டின் முதல் நாளான இன்று பேசப்பட்டது.

உடன்படிக்கையை இந்த ஆண்டின் இறுதிக்குள் தயார்ப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதியளித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்