Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையம்வழி வங்கி சேவையில் Grab?

தென்கிழக்காசியாவின் ஆக மதிப்புமிக்க நிறுவனமான Grab, சிங்கப்பூரின் வங்கி மற்றும் நிதித் துறைகளில் கால் பதிக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -
இணையம்வழி வங்கி சேவையில் Grab?

படம்:REUTERS/Edgar Su/Files

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென்கிழக்காசியாவின் ஆக மதிப்புமிக்க நிறுவனமான Grab, சிங்கப்பூரின் வங்கி மற்றும் நிதித் துறைகளில் கால் பதிக்கக்கூடும்.

இணையம்வழி மட்டுமே சேவை வழங்கும் வங்கிகளை சிங்கப்பூரில் அனுமதிக்க வங்கிச் சந்தைக் கட்டுப்பாட்டாளர்கள் யோசித்து வருகின்றனர். 

அது நடந்தால் Grab நிறுவனம் இணையம்வழி மட்டுமே சேவையாற்றும் வங்கிகளுக்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வங்கிச் சேவை ஆற்றலை மதிப்பிடுவதன் தொடர்பில் ஒரு நிறுவனத்தை Grab பணியில் அமர்த்தவிருக்கிறது.

சிங்கப்பூரில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ள Grab நிறுவனம் அதுபற்றிய மேல் விவரங்களை வெளியிடவில்லை.

சிங்கப்பூர் நிதித்துறையின் பெரும் போட்டியாளரான ஹாங்காங், இந்த ஆண்டின் முற்பாதியில் இணையம்வழி மட்டும் இயங்கும் வங்கிகளுக்கான உரிமங்களை வழங்கத் தொடங்கியது.

DBS குழுமம், OCBC,  UOB வங்கிகள் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் வங்கிச்சந்தைக்கு Grab நிறுவனத்தின் அறிமுகம் சவாலாக அமையலாம் என்று கூறப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்