Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-ஹாங்காங் சிறப்புப் பயண ஏற்பாடுகள் பரிசீலனை செய்யப்படும்

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்குமான சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்து, அடுத்தமாத நடுப்பகுதியில் பரிசீலனை செய்யப்படும்.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்குமான சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்து, அடுத்தமாத நடுப்பகுதியில் பரிசீலனை செய்யப்படும்.

சிங்கப்பூரில் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அன்றாட எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஹாங்காங்கிலும் கடந்த சில வாரங்களாகச் சமூக அளவில் கிருமிப் பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை, நிலைப்பட்டுள்ளது.

சிங்கப்பூரும் ஹாங்காங்கும், தங்களுக்கு இடையிலான பயண ஏற்பாடுகளைப் பாதுகாப்பாகச் செயல்படுத்துவதில் உறுதியாய் உள்ளதாகக் கூறின.

அதிகாரிகள், பொதுச் சுகாதார நிலையை, தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்