Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2018இல் குடும்ப வருமானங்கள் உயர்ந்தன

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு குடும்ப வருமானம் அதிகரித்ததாகவும் வருமான ஏற்றத்தாழ்வு நிலையாக இருந்ததாகவும் இன்று வெளியிடப்பட்ட அதிகாரத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 

வாசிப்புநேரம் -
2018இல் குடும்ப வருமானங்கள் உயர்ந்தன

(படம்: Hester Tan)

சிங்கப்பூரில் 2018ஆம் ஆண்டு குடும்ப வருமானம் அதிகரித்ததாகவும் வருமான ஏற்றத்தாழ்வு நிலையாக இருந்ததாகவும் இன்று வெளியிடப்பட்ட அதிகாரத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி வழிநடத்தும், குறைந்தது ஒருவர் வேலை செய்யும் குடும்பங்களின் இடைநிலை மாத வருமானம் கடந்த ஆண்டு 3 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

அனைத்து வருமானப் பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்கள், ஒவ்வோர் உறுப்பினரின் சராசரி வேலை வருமானத்தில் ஏற்றத்தைக் கண்டதாக ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலும், வருமான ஏற்றத்தாழ்வு விகிதம் 10 ஆண்டுகளில் ஆகக் குறைவான விகிதங்களில் ஒன்றாக இருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்