Images
  • boat
    (படம்: SPF)

சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூவர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூருக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக வெளிநாட்டவர் மூவர் மீது இன்று குற்றஞ்சாட்டப்படும்.

சம்பவம் நேற்று முன்தினம் (ஜனவரி 12) நடந்தது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த 44 வயது ஆடவரும் 41 வயது பெண்ணும் வேலைத் தேடுவதற்காக மலேசியாவிற்குச் செல்ல எண்ணியதாக நம்பப்படுகிறது.

மலேசியாவைச் சேர்ந்த 39 வயது ஆடவர், அவர்களைப் படகில் அழைத்து செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், அந்தப் படகு, சிங்கப்பூரின் கடல் எல்லைக்குள் நுழைந்தது.

சாங்கி கரையோரத்திற்கு அருகே இருந்த படகில், தகுந்த அடையாள எண் இல்லை என்பதைக் கடலோரக் காவல் படையினர் கவனித்தனர்.

மூவரும், பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்தோனேசியர்கள் இருவருக்கும் அதிகபட்சம் 6 மாதச் சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அவர்களை மலேசியாவிற்கு அழைத்து செல்ல முயன்ற ஆடவருக்கு 2 முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் குறைந்தது 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். 

Top