Images
  • Singapore Indonesia bilateral financial agreement (1)
    (படம்: Amir Yusof)

$13.8 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு நிதி ஒப்பந்தத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா கையெழுத்திடவிருக்கின்றன

சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் 13.8 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இருதரப்பு நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாக இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) இன்று (அக்டோபர் 11) அறிவித்துள்ளார்.

இரு நாடுகளின் நிதித்துறையில் நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பதற்கு அந்த ஒப்பந்தம் உதவும் என நம்பப்படுகிறது.

உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் புரிவதற்கான உடன்பாடு அதில் அடங்கும்.

நிதி ஏற்ற இறக்கம் ஏற்படும் தருணத்தில் எவ்விதப் பதற்றமுமின்றி இரு நாடுகளும் வர்த்தகம் புரிவதற்கு அந்த உடன்பாடு உதவும் என நம்பப்படுகிறது.

இம்மாதிரியான ஒப்பந்தங்களை மத்திய வங்கிகள் செயல்படுத்துவது வழக்கம்.

இந்தோனேசிய மத்திய வங்கி, சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியைத் தாம் வரவேற்பதாகத் திரு. விடோடோ கூறினார்.

தற்போது இருக்கும் நாணயப் பரிவர்த்தனை விகிதத்திற்கேற்ப, இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களது நாணயத்தை மாற்றிக்கொள்ளும் என்றும் காலக்கெடுவிற்குப் பின் அவை அதே விகிதத்தில் மீண்டும் அவற்றின் நாணயங்களைப் பெற்றுக்கொள்ளும் என்றும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் விளக்கினார்.

அதனால், இரு நாடுகளுமே நிதித்துறை நிலைத்தன்மையைக் கட்டிகாக்க சிங்கப்பூர் அல்லது இ ந்தோனேசிய நாணயத்தைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.









 

Top