Images
  • Singapore, Indonesia
    கோப்புப் படம்:  Amir Yusof

சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்

சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அத்துடன் நான்கு இணக்கக் குறிப்புகளும் கையெழுத்தாகின.

பாலித் தீவின் Laguna Luxury ஹோட்டலில் இருநாடுகளும் கலந்துகொண்ட தலைவர்கள் சந்திப்பில் அது நிகழ்ந்தது.

சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்கும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடியும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதனை சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங்கும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் பார்வையிட்டனர்.

இருநாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிப்பதும் பாதுகாப்பை மேம்படுத்துவதும் ஒப்பந்தத்தின் நோக்கம்.

அதேவேளையில் இருநாடுகளிடையே உள்ள வலுவான பொருளியல் உறவுகளையும் ஒத்துழைப்பையும் அது மறுஉறுதிப்படுத்தும் வகையில் அமையும்.

2014ஆம் ஆண்டிலிருந்து இந்தோனேசியாவின் ஆகப்பெரிய முதலீட்டாளராக சிங்கப்பூர் இருந்து வருகிறது. 2017ஆம் ஆண்டில் முதலீட்டின் மதிப்பு 8.4 பில்லியன் டாலரை எட்டியதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.


Top