Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியா- சிங்கப்பூர் தரைவழிப் பயண ஏற்பாடு - 64 பேருந்துச் சேவைகள் வழங்கப்படும்

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயண ஏற்பாட்டிற்கு அன்றாடம் 64 பேருந்துச் சேவைகள் வழங்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயண ஏற்பாட்டிற்கு அன்றாடம் 64 பேருந்துச் சேவைகள் வழங்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்குமென அறிவிக்கப்பட்டது.

அதே நாளில், சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் வான்வழி எல்லைகளும் திறக்கப்படவுள்ளன.

தரைவழிப் பயணம் மேற்கொள்வோர், ஜொகூர் பாலம்வழி குறிப்பிட்ட பேருந்துகளில் நாடுகளிடையே பயணம் மேற்கொள்ளமுடியும்.

அதில் 2 பேருந்துச் சேவை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 45 பயணிகள்வரை பயணம் மேற்கொள்ளலாம்.

பயணச்சீட்டுகள் நாளை (25 நவம்பர்) காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்படும். அவற்றை, பயணம் மேற்கொள்வதற்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னர், வாங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தரைவழிப் பயண ஏற்பாடு, மேலும் அதிகமானோருக்குக் கட்டங்கட்டமாக விரிவுபடுத்தப்படுமென பிரதமர் அலுவலகம் கூறியது.

துவாஸ் வழி இருநாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாட்டுப் பணிகள் தொடர்வதாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்