Images
  • Singapore Leaders Habibie
    (படம்:  AFP/Adek BERRY)

மறைந்த இந்தோனேசிய முன்னாள் அதிபருக்குப் புகழஞ்சலி


இந்தோனேசிய முன்னாள் அதிபர் திரு. ஹபிபீயின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரு. ஹபிபீயின் மகன் இல்ஹாம் அக்பர் ஹபிபீக்கு சிங்கப்பூர்த் தலைவர்கள் ஆறுதல் கூறினர்.

மறைந்த திரு.ஹபிபீ இந்தோனேசியர்களுக்குச் சேவையாற்றுவதில் உறுதியாக இருந்தவர் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் புகழ்ந்துள்ளார்.

அவர் இந்தோனேசியர்கள் வாழ்க்கையை மேம்படுத்த பலவிதங்களில் முயன்றார் என்றும் திருமதி ஹலிமா குறிப்பிட்டார்.

சிரமமான காலகட்டத்தில் திரு. ஹபிபீ தமது நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தியவர் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியிருக்கிறார்.

1997ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, இந்தோனேசியப் பொருளியலை நிலைப்படுத்தவும், இந்தோனேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் திரு. ஹபிபீ பாடுபட்டார் என்று திரு. லீ சொன்னார். 

Top