Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நேப்பாள, பங்களாதேஷ் தலைவர்களுக்கு இரங்கல் செய்திகளை அனுப்பிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் நேற்று காட்மாண்டில் நிகழ்ந்த விமான விபத்தைத் தொடர்ந்து நேப்பாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
நேப்பாள, பங்களாதேஷ் தலைவர்களுக்கு இரங்கல் செய்திகளை அனுப்பிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

(படம்: AP/Niranjan Shreshta)

அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் நேற்று காட்மாண்டில் நிகழ்ந்த விமான விபத்தைத் தொடர்ந்து நேப்பாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் (US-Bangla Airlines) நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் டாக்காவிலிருந்து நேப்பாளத் தலைநகர் காட்மாண்டுக்குச் சென்றது. அது காட்மாண்டில் விழுந்து நொறுங்கியபோது விமானத்திலிருந்த 71 பேர் மாண்டனர்.

பயணிகளில் பெரும்பாலானோர் நேப்பாளத்தையும் பங்களாதேஷையும் சேர்ந்தவர்கள்.

சிங்கப்பூரர்களின் சார்பில் பங்களாதேஷ் அதிபருக்குக் கடிதம் ஒன்றை இன்று அனுப்பிய அதிபர் ஹலிமா, விபத்தைப் பற்றி அறிந்தபோது மிகவும் வருத்தமடைந்ததாக எழுதியிருந்தார்.

முதல்முறையாக சிங்கப்பூருக்கு வருகை புரிந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவிடம் தமது இரங்கலை பிரதமர் லீ தெரிவித்தார்.

தனியாக நேப்பாளப் பிரதமர் கே பி ஷர்மா ஒலிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் லீ தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்