Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதைத் திட்டம் முடிவெடுப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதைத் திட்டம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிங்கப்பூரும், மலேசியாவும் இணங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதைத் திட்டம் முடிவெடுப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

(படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூர் - ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதைத் திட்டம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிங்கப்பூரும், மலேசியாவும் இணங்கியுள்ளன.

மலேசியப் போக்குவரத்து அமைச்சின் அறிக்கை அதனைத் தெரிவித்தது.

கூடுதல் கட்டணமின்றி அந்தப் பாதையை அமைக்கும் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இருதரப்பும் இணங்கியதால் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாய் அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

முன்னதாக, மலேசியாவின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாதம் 30ஆம் தேதிவரை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க இணக்கம் காணப்பட்டது.

அதற்கு ஈடாக, மலேசியா சிங்கப்பூருக்கு சுமார் 600,000 வெள்ளி செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இம்மாதம் 30ஆம் தேதிக்குள் திட்டத்தைத் தொடர்வது குறித்து மலேசியா முடிவெடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திட்டத்தில் மாற்றங்களை அது  பரிந்துரைக்கலாம். சிங்கப்பூர் அவற்றைப் பரிசீலனை செய்யும் என்றும் உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்