Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம்

கிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம்

(படம்: Try Sutrisno Foo/ CNA)


கிருமித்தொற்று குறித்த ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணங்கியுள்ளன.

COVID-19இன் பாதிப்புகளைச் சமாளிக்க இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் கூட்டுப் பணிக்குழுச் சந்திப்பு நேற்று ஜொகூர் பாருவில் நடைபெற்றது.

அதில், இருநாட்டு நிலவழி எல்லைகளிலும் ஒரே விதமான சுகாதாரச் சோதனைகளை நடைமுறைப்படுத்த இணக்கம் காணப்பட்டது.

மேலும், நோயாளிகளின் மருந்தக நிர்வாகம், தேசிய ஆலோசனை அறிவிப்புகள் ஆகிய தகவல்களைப் பறிமாறிக் கொள்ளவும் கூட்டுப் பணிக்குழு ஒப்புக்கொண்டது.

சந்திப்பின்போது, சிங்கப்பூரையும் மலேசியாவையும் சேர்ந்த மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரவர் நாடுகளிலுள்ள COVID-19 பரவல் நிலவரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜொகூர் பாருவிலுள்ள சுல்தான் இஸ்கந்தர் (Sultan Iskandar) சுங்கச்சாவடியில் இருக்கும் சுகாதாரப் பரிசோதனை வசதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

அந்த கூட்டுப் பணிக்குழு அடுத்த மாதமும் சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்