Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் இன்னும் விற்கப்படுகின்றன: வர்த்தக, தொழில் அமைச்சு

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் இன்னும் விற்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் இன்னும் விற்கப்படுகின்றன: வர்த்தக, தொழில் அமைச்சு

கோப்புப் படம்: Try Sutrisno Foo/ CNA)

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் இன்னும் விற்கப்படுவதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பேருந்துப் பயணச்சீட்டுகள் 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக Transtar எனும் பேருந்துச் சேவை நிறுவனத்தின் இணையத்தளத்தில் நேற்று குறிப்பிடப்பட்டது.

அவ்வேளையில் அதன் இணையத்தளத்தைப் பலர் அணுகியதாகவும், இணையத்தளத்தில் சீர்செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்தது.

இணையத்தளத்தில் பின்னர் பயணச்சீட்டுகளை மீண்டும் வாங்க முடிந்ததாகத் தெரிகிறது.

நேற்றுப் பிற்பகல் 4 மணி நிலவரப்படி, சிங்கப்பூர் வருவதற்கான பயணச்சீட்டுகளில் 90 விழுக்காட்டுக்கு அதிகமாகவும் மலேசியா செல்லும் பயணச்சீட்டுகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் விற்கப்படவில்லை என்று அமைச்சு கூறியது.

தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயண ஏற்பாட்டின் தொடர்பில் VTP எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான பயண அட்டைக்கு, 240 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்