Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலேசியா- சிங்கப்பூர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் - திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கும்

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா- சிங்கப்பூர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் - திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கும்

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லாத தரைவழிப் பயணம் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கவுள்ளது.

அதுகுறித்து பிரதமர் அலுவலகம் இன்று தகவல் வெளியிட்டது.

தரைவழிப் பயணத்தை மேற்கொள்ள,குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி வைத்திருப்போர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

அதன்வழி எல்லை கடந்து பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய குடும்பங்களைச் சந்திக்க முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்யமுடியும் என்று அலுவலகம் சொன்னது.

இருநாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்புண்டு..தரைவழிப் பயண ஏற்பாடு இருநாட்டு மக்களையும் பொருளியல்களையும் இணைக்க உதவும் முயற்சியில் பெரும் முன்னேற்றமாகச் செயல்படும். இருதரப்பு உறவையும் மேம்படுத்தக்கூடியது,

என்று பிரதமர் லீ சியென் லூங் கூறினார்.

தரைவழிப் பயண ஏற்பாட்டு நடைமுறை

- பயணிகள், ஜொகூர் பாலம் வழி நிர்ணயிக்கப்பட்ட பேருந்துகளில் நாடுகளிடையே பயணம் மேற்கொள்ளமுடியும்.

- கடந்த 14 நாள்களுக்கு சிங்கப்பூரிலோ மலேசியாவிலோ இருந்திருக்கவேண்டும்.

- எல்லையைக் கடப்பதற்கு 2 நாள்களுக்குள் ART அல்லது PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

- ஜொகூரைச் சென்றடைந்தவுடன், கூடுதல் ART பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு அது தேவையில்லை.

- சிங்கப்பூருக்கு வருவோர் SG Arrival Card எனும் ஆவணத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். மேல் விவரம்: https://www.ica.gov.sg/enter-depart/entry_requirements/sg-arrival-card 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்