Images
  • causeway (1)

சிங்கப்பூர்-மலேசியா பேருந்துப் பயணச்சீட்டுகள்... 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வதற்கான பேருந்துப் பயணச்சீட்டுகள் 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையின்றி, ஜொகூர் வழியே மலேசியா செல்வதற்கான சிறப்புப் பயண ஏற்பாடு வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.

பேருந்துப் பயணச்சீட்டு விற்பனைக்காக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று Transtar.

இணையப்பக்கத்தில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய பயணச்சீட்டு விற்பனை இருபது நிமிடத்தில் நிறைவடைந்ததாக Transtar கூறியது.

ஒரே நேரத்தில் நிறையப் பேர் இணையப்பக்கத்தை நாடியதால் சிலர் சிரமத்தைச் சந்தித்ததாகத் தெரிகிறது.  

Top