Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி ஈராண்டு காணாத சரிவு

சிங்கப்பூரில் சென்ற மாதம் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில், 11.7 விழுக்காடு குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி ஈராண்டு காணாத சரிவு

கோப்புப் படம்: AFP/Roslan Rahman

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் சென்ற மாதம் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில், 11.7 விழுக்காடு குறைந்துள்ளது.

அது ஈராண்டு காணாத சரிவு.

மின்னியல் பொருள்கள், மின்னியல் சாராப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு அதற்குக் காரணம்.

அமெரிக்காவைத் தவிர சிங்கப்பூரின் முன்னணிச் சந்தைகளுக்கான ஏற்றுமதி கடந்த மாதம் வீழ்ச்சிகண்டது. ஜப்பான், தைவான், ஹாங்காங் ஆகியவற்றின் சந்தைகள் அந்தச் சரிவை எதிர்நோக்கின.

 கடந்த மாதம் சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் குறைந்தவேளையில், இறக்குமதிகள் அதிகரித்தன. அதனால், ஒட்டுமொத்த வர்த்தகம் 0.9 விழுக்காடு சுருங்கியது.

Enterprise Singapore இன்று காலை அந்தத் தகவல்களை வெளியிட்டது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்