Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மின்னிலக்க வர்த்தகப் பொருளியலில் சிங்கப்பூர் நீக்குப்போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம்: அமைச்சர் ஈஸ்வரன்

மின்னிலக்க வர்த்தகப் பொருளியலில் சிங்கப்பூர் ஈடுபடும்போது நீக்குப்போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம் எனத் தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மின்னிலக்க வர்த்தகப் பொருளியலில் சிங்கப்பூர் நீக்குப்போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம்: அமைச்சர் ஈஸ்வரன்

(கோப்புப் படம்)

மின்னிலக்க வர்த்தகப் பொருளியலில் சிங்கப்பூர் ஈடுபடும்போது நீக்குப்போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம் எனத் தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Asia House அனைத்துலக வர்த்தகக் கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

ஆசியான், உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றுடன் செயல்படும் அதேவேளையில், மின்னிலக்க வர்த்தகத்தில் இணைய விரும்பும் நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள சிங்கப்பூர் தயாராக உள்ளதாய்த் திரு. ஈஸ்வரன் சொன்னார்.

நாடுகளுக்கு இடையே தகவல்களைத் தடையின்றி பகிர்ந்துகொள்ள அந்த ஒப்பந்தங்கள் வகைசெய்யும் என அவர் விளக்கினார்.

ஆர்வமுள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சிங்கப்பூர் தயாராக இருப்பதை அமைச்சர் சுட்டினார்.

தகவல் பரிமாற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்  குறிப்பிட்டார்.

மின்னிலக்க அடையாளம், இருதரப்பு அங்கீகாரம், மின்னியல்-விலைப்பட்டியல் எனப் பொதுவான தரநிலைகளை அமைப்பது அவசியம் எனத் திரு. ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பான விதிமுறைகளை வகுப்பதும் அவசியம் என அவர் சொன்னார்.

மனிதர்களை அதிகம் சார்ந்த, வெளிப்படையான தொழில்முறை நீடிப்பதை உறுதிசெய்ய அது உதவும் எனத் திரு. ஈஸ்வரன் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்