Images
  • Heng Swee Keat
    (படம்: TODAY file photo)

பகுதி மின்கடத்திக்கான தேவையை நிறைவுசெய்யும் முயற்சி தொடரவேண்டும்:துணைப் பிரதமர் ஹெங்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூர் அதன் சிறந்த தொடர்புத் தன்மை, வர்த்தகங்களுக்கு ஆதரவான சூழல், திறமையான ஊழியரணி ஆகியவற்றைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட்  தெரிவித்துள்ளார்.

பகுதி மின்கடத்திகளுக்கான உலகளாவிய தேவை அதிகரிக்கும்போது அதை சிங்கப்பூர்  நிறைவுசெய்ய அவை உதவும் என்றார் அவர்.

Micron Technology நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட வளாகத்தின் திறப்புவிழாவில் திரு. ஹெங் அவ்வாறு கூறினார்.

பகுதி மின்கடத்தித் துறையின் உலகளாவிய தேவை நீண்டகாலத்திற்கு வலுவாய் உள்ளதாகத் திரு. ஹெங் தெரிவித்தார்.

இவ்வாண்டு பகுதி மின்கடத்தித்துறை நெருக்கடியான நிலையில் இருப்பதை அவர் சுட்டினார்.

அமெரிக்க பகுதி மின்கடத்தி நிறுவனமான Micron சிங்கப்பூரில் விரிவாக்கம் காண்பதை அது தடுக்கவில்லை. அது அனைத்துலக முதலீட்டாளர்கள் சிங்கப்பூர்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகத் திரு. ஹெங் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்திற்குத் தேவையான நுண்சில்லுகளின் உற்பத்திக்கு நிறுவனம் ஆதரவளிக்கும்.

சிங்கப்பூரிலுள்ள நிறுவனத்தில் சுமார் 35,000 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க, சீன வர்த்தகப் பதற்றத்துக்கிடையிலும் Micron நிறுவனம் நல்ல வளர்ச்சிகண்டு வருவதாக நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.


Top