Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2050ஆம் ஆண்டிற்குள் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: சான் சுன் சிங்

மலேசியாவுடன் இருக்கும் தண்ணீர் உடன்படிக்கை 2061ஆம் ஆண்டில் நிறைவடைகிறது. அதற்கு முன்னர்  வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை சிங்கப்பூர் உறுதிப்படுத்த வேண்டும். 

வாசிப்புநேரம் -
2050ஆம் ஆண்டிற்குள் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: சான் சுன் சிங்

கோப்புப் படம்: PUB

மலேசியாவுடன் இருக்கும் தண்ணீர் உடன்படிக்கை 2061ஆம் ஆண்டில் நிறைவடைகிறது. அதற்கு முன்னர்  வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை சிங்கப்பூர் உறுதிப்படுத்த வேண்டும் எனப் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று (பிப்பிவரி 24) கூறினார்.

அதற்கு ஆழ் சுரங்கப் பாதாளச் சாக்கடை முறையின் இரண்டாம் கட்டப்பணி கைகொடுக்கவுள்ளது. அதன் மூலம் சிங்கப்பூர் மண்ணில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் சேகரிப்பது திண்ணம். அதே நேரத்தில் தண்ணீர் மறுபயனீடு செய்யப்படும்.

அந்த ஆழ் சுரங்கப் பாதாளச் சாக்கடையின் மூலம் சிங்கப்பூரின் மூன்று தண்ணீர் மீட்பு ஆலைகளுக்குத் தண்ணீர் சேகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. சாங்கி, கிராஞ்சி, துவாஸ் ஆகிய இடங்களில் அந்த ஆலைகள் அமைந்திருகின்றன. அங்கு விநியோகமாகும் தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது.

தூய்மைப்படுத்திய பிறகு அது புதுநீர் (NEWater) ஆகுகிறது. அல்லது கடலில் வெளியேற்றப்படுகிறது.

தஞ்சோங் பகார், ரடின் மாஸ் தொகுதிகளின் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டு இரவு விருந்து நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்