Images
  • trade
    படம்: STR/AFP

அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் விளைவுகளைச் சமாளிக்க சிங்கப்பூர் தயாராய் இருக்கவேண்டும்: அமைச்சர் சான்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க-சீன வர்த்தகப் பூசலால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சமாளிக்க சிங்கப்பூர் தயாராக இருக்கவேண்டும் என வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.

அந்த வர்த்தகப் போர் கடுமையான ஒன்று என்றார் அவர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆழமான பதற்றநிலையையும், அவற்றின் பொருளியல்கள் எதிர்நோக்கும் உள்நாட்டுச் சவால்களையும் அது பிரதிபலிப்பதாக அமைச்சர் சான் சொன்னார்.

Facebook பதிவு ஒன்றில் அவர் கருத்துரைத்தார். வர்த்தகப் பூசலால் ஏற்படக்கூடிய இடையூறு மூலம் சில நிறுவனங்கள் குறுகிய காலத்தில் பலன் பெறலாம்.

இருப்பினும், மோசமடைந்துவரும் வர்த்தகப் பதற்றநிலை நாளடைவில் உலக வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்கலாம் என அமைச்சர் சான் எச்சரித்தார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சூழலைப் பல நாடுகள் சார்ந்திருப்பது அதற்குக் காரணம்.


Top