Images
  • singpost olympics stamps
    படம்: SingPost 

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு சிங்கப்பூரில் சிறப்பு அஞ்சல் தலைகள்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு சிங்கப்பூரில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்படவுள்ளன.

ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளான ஜூலை 23ஆம்
தேதி (வெள்ளிக்கிழமை) அவை விற்பனைக்கு வரும் என்று SingPost தெரிவித்தது.

மொத்தம் 6 அஞ்சல் தலைகள் வெளியிடப்படும்.

சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்குபெறும் சில விளையாட்டுகளை மையமாகக் கொண்டு அந்த அஞ்சல் தலைகள் வெளியாவதாக SingPost கூறியது.

நீச்சல், முக்குளிப்பு, படகோட்டம், மேசைப்பந்து, பேட்மிண்டன், குறிசுடுதல் ஆகியவை அந்த விளையாட்டுகளில் அடங்கும்.

அஞ்சல் தலைகளின் விலை 30 காசுக்கும் 1.40 வெள்ளிக்கும் இடையில் இருக்கும். அவற்றை SingPost அலுவலகங்களிலும் இணையப்பக்கத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.  

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்
.
 

Top