Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உலகின் ஆகப் போட்டித்தன்மைமிக்க பொருளியல் - அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியது சிங்கப்பூர்

உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க பொருளியலாக இவ்வாண்டு சிங்கப்பூர் தெரிவுபெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் போட்டித்தன்மைமிக்க பொருளியல் - அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியது சிங்கப்பூர்

படம்: நித்திஷ் செந்தூர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

உலகின் ஆக அதிகப் போட்டித்தன்மைமிக்க பொருளியலாக இவ்வாண்டு சிங்கப்பூர் தெரிவுபெற்றுள்ளது.

பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி அது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகப் பொருளியல் மன்றம் நேற்று வெளியிட்ட உலகப் போட்டித்தன்மை அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

உள்கட்டமைப்பு, சுகாதாரம், ஊழியர் சந்தை, நிதிக் கட்டமைப்பு, பொது அமைப்புகளின் தரம், பொருளியல் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளுக்கு 0 முதல் 100 வரையிலான புள்ளிகள் வழங்கப்பட்டன.

சிங்கப்பூர் அதில் 84.8 புள்ளிகள் பெற்றது.

சென்ற ஆண்டு 85.6 புள்ளிகள் பெற்றிருந்த அமெரிக்கா இம்முறை 83.7 புள்ளிகள் பெற்றது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போரும் அதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போராட்டம் சிங்கப்பூர்த் துறைமுக வர்த்தகத்துக்குச் சாதகமாக அமைந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.

பட்டியலில் மூன்றாம் இடம் ஹாங்காங்கிற்கு.

நெதர்லந்து நான்காவது இடத்தையும், சுவிட்சர்லந்து ஐந்தாம் இடத்தையும் பிடித்தன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்