Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

200ஆண்டுகளில் காவல்துறை சந்தித்த சவால்கள் என்னென்ன?

சிங்கப்பூர்க் காவல்துறை அதன் 200ஆண்டு நிறைவை அனுசரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
200ஆண்டுகளில் காவல்துறை சந்தித்த சவால்கள் என்னென்ன?

(படம்: Singapore Police Force/Facebook)

சிங்கப்பூர்க் காவல்துறை அதன் 200ஆண்டு நிறைவை அனுசரித்து வருகிறது.

காவல்துறை எப்படி மாறி வந்துள்ளது? அது சந்தித்த சவால்கள் என்னென்ன?

1820: காவல்துறைப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூரை ஒரு வணிகத் தலமாக நிறுவியபின், குடியேறிகள் பலர் இங்கே ஒன்றுகூடத் தொடங்கினர்.   சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அவசியமான நிலையில், காவல்துறைப் பிரிவு தொடங்கப்பட்டது.

1826-1872: வறுமையான குடியேறிகளைக் கொண்ட சிங்கப்பூரில் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கின. கடற்கொள்ளைச் சம்பவங்கள், கடல்துறை வர்த்தகத்தைப் பாதிக்கத் தொடங்கின. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சட்ட அமைப்புகள் ஈடுகொடுக்க இயலவில்லை.

1866: கடற்கொள்ளையை எதிர்கொள்ளவும், கடல்வழிகளைப் பாதுகாக்கவும், கடல்துறைக் காவல் பிரிவு அமைக்கப்பட்டது. மிதக்கும் காவல் நிலையமும் நிறுவப்பட்டது.

1881:சீக்கியக் காவல்துறைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூரில் குடியேறிகள் அதிகரிக்க அதிகரிக்க, குற்றச் செயல்களும்  அதிகரித்தன. போதைப்புழக்கம், சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபடும் ரகசிய அமைப்புகளின் ஆதிக்கத்தைக் குறைக்க, சீக்கியக் காவல்துறைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

1945: காவல்துறைக்கு அதிகாரபூர்வமாக 'சிங்கப்பூர்க் காவல்துறை' என்று பெயர் சூடப்பட்டது.

- ரகசிய அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்தது. பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நேர்ந்தன. 

-1946, 1949, 1952 ஆகிய ஆண்டுகளில் நேப்பாளிகளைக் கொண்ட கூர்க்கா பிரிவு உருவாக்கப்பட்டது.

1948: '999' என்ற காவல்துறை அவசர உதவி எண் நடைமுறைக்கு வந்தது.

1949:  பெண்கள் காவல்துறைப் பிரிவு உருவாக்கப்பட்டது.

1963: மலேசியாவுடன் இணைந்த சிங்கப்பூரில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

1964: மோசமான இனக் கலவரங்கள் நேர்ந்தன. அதனைத் தொடர்ந்து 10,000 தொண்டூழியர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடத் தங்களைப் பதிவுசெய்துகொண்டனர். 

1968: காவல்துறையின் சின்னத்தில் 'Polis Repablik Singapura' ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

1967: காவல்துறை தேசியச் சேவை அறிமுகமானது.

1969: சீருடை, அனைத்துலகக் காவல்துறை வண்ணத்துக்கு ஏற்ப , காக்கி நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாறியது.

1983: மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசித்து வந்தனர். வீடமைப்புப் பேட்டைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதன்மீது கவனம் அதிகரித்தது.

1997: சட்டத்தை வலியுறுத்தும் அமைப்பு என்ற நிலையிலிருந்து காவல்துறை, சமூகத்தின் நம்பகமான உறுப்பினர் என்ற தோற்றத்திற்கு மாற முனைந்தது.

2001: குற்றச் செயல்கள் பாதிக்கு மேல் குறைந்தன.இருப்பினும், அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சிங்கப்பூர்க் காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனத்தைத் திருப்ப நேர்ந்தது.

2001-இப்போதுவரை: பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்துள்ளது.

2018: சட்டம், ஒழுங்கு ஆகியவற்றை வலியுறுத்தும் ஆகச் சிறந்த நாடுகளின் Gallup நிறுவனப் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

இரவு நேரத்தில் அச்சமின்றி நடமாட முடிவதாக 94 விழுக்காட்டுக் குடியிருப்பாளர்கள் கருத்துரைத்ததன் அடிப்படையில் அந்தத் தகுதி சிங்கப்பூருக்குக் கிடைத்தது.

காவல் பணியில், சமூகத்தையும் திறம்பட இணைத்துக்கொண்டதால், தனது பணிகளை மிகத் திறமையுடன் செய்ய முடிகிறது என்கிறது சிங்கப்பூர்க் காவல்துறை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்