Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கலைக் குறிக்கும் சிங்கப்பூர் அஞ்சல்தலை

பொங்கல் திருவிழாவைக் குறிக்கும் வகையில் அஞ்சல்தலையைச் சிங்கப்பூர் அஞ்சலகம் 2008ஆம் ஆண்டு வெளியிட்டது. 

வாசிப்புநேரம் -

பொங்கல் திருவிழாவைக் குறிக்கும் வகையில் அஞ்சல்தலையைச் சிங்கப்பூர் அஞ்சலகம் 2008ஆம் ஆண்டு வெளியிட்டது.

பொங்கல் திருநாள் பற்றி எடுத்துக் கூறும் அம்சங்கள் இடம்பெறும் சிங்கப்பூரின் முதல் அஞ்சல்தலை என்ற சிறப்பு அதற்கு உண்டு.

கரும்பு, பொங்கல் பானை, மாடு, தோரணம் உள்ளிட்டவற்றை அதில் காணலாம்.

அந்த அஞ்சல்தலையை நியோ லே சீ (Neo Lay See) வடிவமைத்துள்ளார். அதன் மதிப்பு 37 காசு (2nd Local).

சிங்கப்பூரின் பல்வேறு இனக் கொண்டாட்டங்களைச் சித்திரிக்கும் அஞ்சல்தலைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பில் மொத்தம் 12 அஞ்சல்தலைகள் இடம்பெற்றிருந்தன.

பொங்கல், இலையுதிர் காலத் திருவிழா, ஹஜ்ஜூப் பெருநாள், ஈஸ்டர் தினம் ஆகியவற்றைக் குறிக்கும் அஞ்சல்தலைகள் அந்தத் தொகுப்பில் முதன்முறையாக சேர்க்கப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்