Images
  • city skyline
    படம்: நித்திஷ் செந்தூர் 

வெளிநாட்டினர் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற இடமாக முதலிடத்தில் சிங்கப்பூர்: HSBC ஆய்வு

வெளிநாட்டினர் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற இடமாக சிங்கப்பூர் திகழ்வதை HSBC ஆய்வு காட்டுகிறது.

தொடர்ந்து நான்காண்டுகளாக சிங்கப்பூர் தொடர்ந்து முதல் நிலையில் வந்துள்ளது.

22,318 வெளிநாட்டினர் பங்கேற்ற ஆய்வில் பட்டியலிடப்பட்ட 31 இடங்களில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஹாங்காங்கில் வசித்து வேலை செய்யும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினர் குறைவாகச் சம்பாதிக்கின்றனர்.

உலகச் சராசரியோடு ஒப்பிடும்போது அவர்கள் சம்பளம் 30 விழுக்காட்டுக்கு மேல்.

குடும்பங்களுக்கான சலுகைகள், ஒட்டுமொத்த வாழ்கைத்தரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது சிங்கப்பூர் முன்னணியில் நீடிக்கிறது.

சொந்த நாட்டைவிட சிங்கப்பூரில் வேலையிட மனவுளைச்சலுக்கு ஆளாவது அதிகம் என வெளிநாட்டினர் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவினம் அதிகம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

குடும்பத்தோடு வசிக்க ஏற்ற இடமாக சிங்கப்பூர் இருந்துவருவதாக அவர்கள் கருதுகின்றனர்.

ஆய்வில் பங்கேற்ற முக்கால்வாசிப் பேர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைத்தரம் இங்கு மேம்பட்ட நிலையில் உள்ளதாக எண்ணுகின்றனர்.


Top