Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்க இணையப்பக்கம் ஊடுருவல் - 4,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிப்பு

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையப்பக்கம் ஊடுருவப்பட்டதைத் தொடர்ந்து 4,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையப்பக்கம் ஊடுருவப்பட்டதைத் தொடர்ந்து 4,000க்கும் அதிகமானோரின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இணைய ஊடுருவல் குறித்து மே 8ஆம் தேதி தெரியவந்ததாக அமைப்பு அதன் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அன்றைய தினமே காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டதாகவும் அமைப்பு கூறியது.

ரத்த தானம் செய்ய விரும்புவோர் பதிவு செய்வதற்கான இணையப்பக்கத்தில் இடம்பெற்றிருந்த 4,297 பேரின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ரத்தப் பிரிவு உள்ளிட்ட விவரங்கள் ஊடுருவப்பட்டன.

இணையப்பக்கத்திற்கான கடவுச்சொல் எளிதில் ஊடுருவப்படும் தன்மை கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மற்ற தரவுத்தளங்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணையை முன்னிட்டு சங்கத்தின் இணையத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இப்போதைக்குக் குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.

பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்த பிறகு இணையத்தளம் மீண்டும் முழுமையாகச் செயல்படும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்