Images

உள்கட்டமைப்பு வாய்ப்புகளை வட்டார அளவில் பயன்படுத்திக்கொள்ள உதவும் இணைக் குழுக்கள்

வட்டார அளவில் உள்கட்டமைப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் 2 இணைக்குழுக்களை அமைக்கவுள்ளது.

சுற்றுப்புற, நீர்வளம் சார்ந்த துறைகளில் அந்தக் குழுக்கள் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூர் வட்டார உள்கட்டமைப்பு மாநாட்டில் வர்த்தகச் சம்மேளனம் அதனைத் தெரிவித்தது.

ஆசியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் பற்றியும் மாநாட்டில் பேசப்பட்டது.

ஆசியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2030ஆம் ஆண்டு வரை வருடந்தோறும் 1.7 டிரில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் கைகொடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆசியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துவருகிறது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன.

வட்டார அளவில் இருக்கக்கூடிய அரசியல் ரீதியான பூசல்கள், திட்டங்களில் முதலீடு செய்ய எடுக்கப்படும் முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட நிதிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா எச்சரித்தார்.


Top