Images
  • sg covid (35)
    (கோப்புப் படம்: Calvin Oh)

சிங்கப்பூரில் மேலும் 3 பேர் நோய்த்தொற்றால் மரணம்

சிங்கப்பூரில் மேலும் 3 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அக்டோபர் மாதம் 7-ஆம் தேதிக்குப் பின்னர் பதிவான ஆகக் குறைவான அன்றாட மரண எண்ணிக்கை அது.

மாண்ட அனைவரும் 69 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களுக்கு ஏற்கனவே வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 681-ஆனது. 

Top