Images
  • property market
    படம்: OCBC

சிங்கப்பூர் சொத்துச் சந்தை மெதுவடையும்: சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள்

சிங்கப்பூர்: சொத்துச் சந்தையின் வேகத்தை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் சொத்துச் சந்தை மெதுவடையும் என்று உள்ளூர் சொத்து மேம்பாட்டாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சொத்துச் சந்தை சரியும் அபாயம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். GuocoLand, CapitaLand, Mapletree Investments முதலிய நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிதி அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.

முதன்முறையாக வீடுகளை வாங்கும் சிங்கப்பூரர்கள், கூடுதல் முத்திரை வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று GuocoLand Group நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரிச்சர்ட் லாய் தெரிவித்தார்.

 புதிய மாற்றம் வெளிநாட்டினரையே அதிகம் பாதிக்கும் என்றார் அவர். இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டினர் 20 விழுக்காடு கூடுதல் முத்திரை வரியைச் செலுத்த வேண்டும்.

 


உங்கள் கருத்து

Top