Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கணிதத்தை மையமாகக்கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சி

கலைக்கும் கணிதத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

வாசிப்புநேரம் -
கணிதத்தை மையமாகக்கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சி

படம்: NUS Arts Festival

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கலைக்கும் கணிதத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

அவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும்வண்ணம் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் இந்த ஆண்டுக் கலைவிழா அமைந்துள்ளது.

14ஆவது முறையாக அந்த நிகழ்ச்சி இன்று (மார்ச் 15) தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறும்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கணிதத் துறையின் 90 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மின்னிலக்க நாணயம், தரவுப் பகுப்பாய்வு போன்றவற்றுக்கு அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் இது கணிதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றும்  கலைவிழாவின் இயக்குநர் மேரி லோ கூறினார்.

கணிதக் கல்வியில் சிங்கப்பூர் முன்னிலை வகிப்பதையும் அவர் சுட்டினார். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் GH ஹார்டி, கடந்த நூற்றாண்டின் கணித மேதையாகப் போற்றப்படும் திரு ஸ்ரீனிவாச ராமானுஜன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்தபின் பார்வையாளர்கள் கணிதத்தையும் கலையையும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்