Images
  • seithi skyline
    படம்: நித்திஷ் செந்தூர் 

சிங்கப்பூரின் பொருளியல் மூன்றாம் காலாண்டில் 2.6 விழுக்காடு வளர்ச்சி

சிங்கப்பூரின் பொருளியல், ஆண்டு அடிப்படையில் மூன்றாம் காலாண்டில் 2.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அதற்கு முந்திய காலாண்டில் 4.1 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது.

வர்த்தக, தொழில் அமைச்சு வெளியிட்ட முன்னுரைப்பில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

அமைச்சின் முன்னுரைப்பு சிங்கப்பூர் நாணய வாரியம் நடத்திய கருத்துக்கணிப்பை விட அதிகமாக இருந்தது. அந்தத் கருத்துக் கணிப்பில் தனியார் துறைப் பொருளியல் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.1 விழுக்காடாக இருக்கும் என்று முன்னுரைத்தனர்.


Top