Images
  • seithi skyline 2
    படம்: நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூரின் நிலைத்தன்மை குறித்த நல்ல எண்ணத்தை உலக அளவில் ஏற்படுத்தவேண்டும் - அமைச்சர் சான்

சிங்கப்பூரின் நிலைத்தன்மை குறித்த நல்ல எண்ணத்தை உலக அளவில் ஏற்படுத்தவேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தலின்போது அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் சிங்கப்பூரைத் தொடர்ந்து வெற்றிகரமானதாக வைத்திருக்க முடியும் என்றார் அவர்.

தியோங் பாருவின் சீனப் புத்தாண்டு விருந்தில் அவர் அவ்வாறு கூறினார்.

அனைத்துலகச் சூழல் மாறிவரும் வேளையில் நாட்டின் நிலைத்தன்மையை சிங்கப்பூரர்கள் கட்டிக்காக்கவேண்டும் என்று திரு. சான் கூறினார்.

சிங்கப்பூரின் தொடர் வெற்றிக்கு அதன் நிலைத்தன்மை முக்கியப் பங்காற்றியுள்ளதைச் சுட்டிய அவர், பல வர்த்தகங்கள் இங்கு கவரப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றார்.

சிங்கப்பூரின் பொதுத்தேர்தல் முன்னதாகவே நடைபெற வாய்ப்புகள் உண்டு என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

2021ஆம் ஆண்டுக்குள் அது நடைபெற்றாகவேண்டும். நாட்டின் நலனுக்காகத் திடமான முடிவுகளை எடுக்கக்கூடிய துணிச்சல் மிக்க தலைவர்கள் சிங்கப்பூருக்குத் தேவை என்று திரு சான் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த தலைவர்களும் சிங்கப்பூரர்களிடம் சவால்களையும் வாய்ப்புகளையும் பற்றி வெளிப்படையாகப் பேசும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்றார் அவர்.


Top