Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணத் துறையை மேலும் மேம்படுத்தலாம்: எஸ் ஈஸ்வரன்

சிங்கப்பூரின் பயணத் துறையில் தொழில்நுட்பத்தை மேலும் திறமையாகக் கையாண்டு ஆக்ககரமான வளர்ச்சியை அடைய முடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணத் துறையை மேலும் மேம்படுத்தலாம்: எஸ் ஈஸ்வரன்

கோப்புப் படம்: Jeremy Long

சிங்கப்பூரின் பயணத் துறையில் தொழில்நுட்பத்தை மேலும் திறமையாகக் கையாண்டு ஆக்ககரமான வளர்ச்சியை அடைய முடியும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

பயணத்துறை மாநாடு 2018இல் அவர் இன்று (ஏப்ரல் 17) அவ்வாறு கூறினார். தொழில்நுட்பத்தைக் கொண்டு விளம்பர உத்திகளை மேலும் மெருகேற்ற முடியும். அதே நேரத்தில் செயல்திறனையும் அதிகரிக்க முடியும் என்றார் அவர்.

கடந்தாண்டு சிங்கப்பூருக்கு வந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஈராண்டுகளில் இரண்டாவது முறையாக ஆக உச்சத்தை எட்டியதாகச் சிங்கப்பூர்ப் பயணக் கழகம் குறிப்பிட்டது.

சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு அதிகரித்து 17.4 மில்லியனாகப் பதிவானது.

சீனா, இந்தியா, வியட்நாம், பிலிப்பீன்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் ஆக அதிகமாகப் பதிவானது.

இருப்பினும் சிங்கப்பூர்ப் பயணத் துறை கண்டிருக்கும் நல்ல வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும் என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்று திரு. ஈஸ்வரன் சொன்னார்.

வர்த்தகத் தன்னைப்பேணித்தனம் குறித்த போக்கு பரவலாக இருக்கும்போது அது உலகப் பொருளியல் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.

அது பயணத்துறையைப் பாதிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்