பெரியவர்களுக்கான கல்வித்துறையை மேம்படுத்தத் திட்டங்கள்
பெரியவர்களுக்கான பயிற்சித்துறை, கல்வித்துறை ஆகியவற்றை மேம்படுத்த மின்னிலக்கத் திட்டங்கள் புதிதாக அறிமுகம் கண்டுள்ளன.
பெரியவர்களுக்கான பயிற்சித்துறை, கல்வித்துறை ஆகியவற்றை மேம்படுத்த மின்னிலக்கத் திட்டங்கள் புதிதாக அறிமுகம் கண்டுள்ளன.
அந்தத் துறையில் உள்ள சிறிய நடுத்தர நிறுவனங்களின் உருமாற்றத்துக்குத் திட்டங்கள் வழிகாட்டும்.
Adult Learning Symposium 2020 கருத்தரங்கில் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
SkillsFuture சிங்கப்பூர் அமைப்பு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், பெரியவர்களுக்கான கற்றல் நிலையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கருத்தரங்கு முதல்முறையாக இணையம் வாயிலாக நடைபெற்றது.
கல்வி, மனிதவளம் ஆகிய துறைகளுக்கான துணையமைச்சர் திருவாட்டி கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) திட்டங்களை அறிமுகம் செய்துவைத்தார்.
அதோடு InnovDEV எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும், அனுபவம் பெற்ற மின்னிலக்க நிபுணர்களும் ஒன்றிணைந்து செயல்படுவர்.
அத்திட்டத்தின்கீழ் பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம்
- 5000 வெள்ளி வரை
அவ்வாறு அடுத்த மூவாண்டுகளில் சுமார் 200 பயிற்சி நிறுவனங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.