Images
  • Singapore SOKO (1)
    (படம்: REUTERS/Kim Hong-Ji)

தென்கொரியா, சிங்கப்பூருக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் (Moon Jae-in), அதிபர் ஹலிமா யாக்கோபின் அழைப்பையேற்று சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

திரு. மூன் இங்கு 3 நாட்களுக்கு இருப்பார்.

நாளை (ஜூலை 12) அவருக்கு இஸ்தானாவில் வரவேற்புச் சடங்கு இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

திரு. மூன் பிரதமர் லீ சியென் லூங்கைச் சந்திக்கவிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவு மேம்படும் வகையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம், சுற்றுப்புறம், சிறிய, நடுத்தர, புதிய நிறுவனங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் அமையும்.

திரு. மூன் தமது உரையில் கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அமைதி நிலவுவதன் தொடர்பில் தமது திட்டங்கள் பற்றிப் பேசுவார் என தென்கொரிய அதிபர் மாளிகை கூறியிருந்தது.

திரு. மூனின் அதிகாரபூர்வப் பயணத்தின்போது, அவரது வருகையின் நினைவாகத் திரு. மூனும் அவரது மனைவியும் சிங்கப்பூர்ப் பூமலையில் ஆர்க்கிட் மலருக்குப் பெயர்சூட்டிக் கௌரவிக்கப்படுவர்.



 

உங்கள் கருத்து

Top