Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரும் தென் கொரியாவும் 6 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்து

சிங்கப்பூரும் தென் கொரியாவும் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இணங்கியுள்ளன. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரும் தென் கொரியாவும் 6 இணக்கக் குறிப்புகளில் கையெழுத்து

படம்: Ministry of Communications and Information

சிங்கப்பூரும் தென் கொரியாவும் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த இணங்கியுள்ளன. இருநாடுகளுக்கு இடையே இன்று(ஜூலை 12) ஆறு இணக்கக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன. பிரதமர் லீ சியென் லூங்கும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் அதனைப் பார்வையிட்டனர்.

அதிபர் ஹலிமா யாக்கோபின் அழைப்பை ஏற்று திரு. மூன் குடியரசுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆசியான் நாடுகளில் சிங்கப்பூர் தென் கொரியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளி என்று திரு. மூன் குறிப்பிட்டார்.

இருநாட்டுப் பொருளியல் அமைப்புகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும் என்பதால் எதிர்காலத்தில் உறவு மேலும் மேம்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தென் கொரிய அதிபர் கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்