Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வீட்டிலிருந்து MRT நிலையத்திற்குச் சிறிய கார்களில் செல்லலாம்...விரைவில்

சிங்கப்பூர்ச் சாலைகளில் சிறிய QIQ Pod கார்கள் அடுத்த ஆண்டிலிருந்து வலம் வரக்கூடும். 

வாசிப்புநேரம் -
வீட்டிலிருந்து MRT நிலையத்திற்குச் சிறிய கார்களில் செல்லலாம்...விரைவில்

படம்: QIQ Global

சிங்கப்பூர்ச் சாலைகளில் சிறிய QIQ Pod கார்கள் அடுத்த ஆண்டிலிருந்து வலம் வரக்கூடும்.

பயணிகள் வீட்டிலிருந்து அருகில் இருக்கும் பெருவிரைவு ரயில் (MRT) நிலையத்திற்குச் செல்வதற்கு அந்த மின்-கார்களைப் பயன்படுத்தலாம்.

இருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும். உள்ளூர் நிறுவனமான QIQ Global அந்தக் கார்களை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளது.

காரின் அளவு

நீளம்: 2.4 மீட்டர்
அகலம்: 1 மீட்டர்

பகிர்வு மின் வாகனச் சேவைகளை வழங்கும் BlueSG நிறுவனம் போல QIQ Global நிறுவனமும் கார்களை வாடகைக்கு வழங்கும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜஸ்டின் சிம் தெரிவித்தார்.

பொங்கோல் போன்ற வட்டாரங்களில் இந்த மின்-கார்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் பேருந்தை எடுக்கவோ LRT நிலையத்திற்குச் செல்லவோ நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. 

என்று திரு. சிம் கூறினார்.

குறுகிய தூரம் செல்ல QIQ Pod கார்கள் வசதியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்