Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுயதீவிரவாதத்துக்கு ஆட்பட்டோருக்குரிய சரியான மறுவாழ்வு அணுகுமுறையை இன்னும் சிங்கப்பூர் முயன்று வருகிறது - சண்முகம்

சுயமாகத் தீவிரவாதத்திற்கு ஆட்பட்டோருக்கு மறுவாழ்வளிக்கும்   பொருத்தமான அணுகுமுறையை உருவாக்க சிங்கப்பூர் இன்னமும் முயன்று வருவதாக, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று (மார்ச் 13) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சுயதீவிரவாதத்துக்கு ஆட்பட்டோருக்குரிய சரியான மறுவாழ்வு அணுகுமுறையை இன்னும் சிங்கப்பூர் முயன்று வருகிறது - சண்முகம்

உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: Channel NewsAsia

சுயமாகத் தீவிரவாதத்திற்கு ஆட்பட்டோருக்கு மறுவாழ்வளிக்கும்   பொருத்தமான அணுகுமுறையை உருவாக்க சிங்கப்பூர் இன்னமும் முயன்று வருவதாக, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று (மார்ச் 13) கூறியுள்ளார்.

சொந்தமாகத் தீவிரவாதப் பாதைக்குச் செல்லும் தனிநபர்கள், சிக்கலான சமூக, உளவியல் பிரச்சினை உள்ளவர்கள் என்பதை அவர் சுட்டினார்.

ஜெமா ஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதன் வெற்றி விகிதத்துடன் ஒப்பிடுக்கையில், சுயதீவிரவாதப் போக்கில் ஈடுபட்டவர்களின் மறுவாழ்வு வெற்றி விகிதம் குறைவாக உள்ளது என்றார் அவர்.

சமய மறுவாழ்வுக் குழு நடத்திய நிகழ்ச்சியொன்றில், அவர் அவ்வாறு குறிப்பிட்டார். 2007ஆம் ஆண்டு முதல் சுயதீவிரவாதத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டவர்களில், 25 விழுக்காட்டினர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள், இன்னமும் தடுப்புக் காவலில்தான் உள்ளனர்.

ஒப்புநோக்க, ஜெமா ஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களின் மறுவாழ்வு வெற்றி விகிதம் 88 விழுக்காடு என்றார் திரு. சண்முகம்.

சுயமாகத் தீவிரவாதத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் போக்கு அடையாளம் காணப்பட்டது 2007ஆம் ஆண்டுவாக்கில்தான்.

2014இல் ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கம் தலையெடுத்த பிறகு அந்தப் பிரச்சினை கடுமையாகி இருக்கிறது.

எனவே, தனிநபர்கள் எங்கே தவறுகிறார்கள் என்பதை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்றார் திரு. சண்முகம்.

இருப்பினும், சிங்கப்பூர் அதை விட்டுவிடாது. சுய தீவிரவாதப் போக்கில் இணைந்தோரை நல்வழிப்படுத்தும் சரியான அணுகுமுறையை அடையாளம் காண அது தொடர்ந்து பாடுபடும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்