Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்நாட்டு வர்த்தகத்தில் யானைத் தந்தத்தால் ஆன பொருள்களுக்குத் தடை

சிங்கப்பூரின் உள்நாட்டு வர்த்தகத்தில் யானைத் தந்தத்தைக் கொண்டு செய்யப்பட்ட பொருள்களுக்குத் தடை விதிக்கப்படவிருப்பதாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

வாசிப்புநேரம் -
உள்நாட்டு வர்த்தகத்தில் யானைத் தந்தத்தால் ஆன பொருள்களுக்குத் தடை

படம்: NParks

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் உள்நாட்டு வர்த்தகத்தில் யானைத் தந்தத்தைக் கொண்டு செய்யப்பட்ட பொருள்களுக்குத் தடை விதிக்கப்படவிருப்பதாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தடை நடப்புக்கு வரும்.

அதன்பிறகு யானைத் தந்தத்தால் ஆன பொருள்களை சிங்கப்பூரில் விற்கமுடியாது.

அருகிவரும் உயிரினங்களைச் சட்டவிரோத வர்த்தகத்திற்குப் பயன்படுத்துவதில் சிங்கப்பூரின் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தடை விதிக்கப்படுவதாக தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் 1990ஆம் ஆண்டிலிருந்து யானைத் தந்தத்தால் ஆன பொருள்களின் அனைத்துலக வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

புதிய தடை நடப்புக்கு வந்தபிறகு, ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு, விற்கப்படாத பொருள்களை கல்விப் பயன்பாட்டிற்கு நன்கொடையாக வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

யானைத் தந்தத்தால் ஆன பொருள்களை விற்பவர்களுக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்