Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அரக்கான் படைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்: உள்துறை அமைச்சு

மியன்மார் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய வன்முறைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர் சிலர், சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மியன்மார் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய வன்முறைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர் சிலர், சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சு அதனைத் தெரிவித்துள்ளது.

கைதானவர்களில், அரக்கான் படைத் தலைவரின் உறவினரும் ஒருவர்.

மியன்மார் அரசாங்கம், அரக்கான் படையைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியிருக்கிறது.

மியன்மாரின் செய்தி இணையத்தளமான The Irrawaddy அந்தத் தகவலை வெளியிட்டது.

சிங்கப்பூரில் உள்ள மியன்மார் மக்களில் சிலரை, அரக்கான் படைக்கு ஆதரவு தருமாறு அந்தப் படையைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சு கூறியது.

தடுத்துவைக்கப்பட்டவர்கள் AAS எனும் சிங்கப்பூர் அரக்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் வன்முறையால் இடம்பெயர்ந்த அரக்கான் மக்களுக்கு, சிங்கப்பூரில் இருந்து நிவாரண உதவி வழங்கும் சமூகநல அமைப்பாக அது செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.

AAS அமைப்பின் Facebook பக்கம் அகற்றப்பட்டதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கைதான மியன்மாரைச் சேர்ந்த நபர்கள், அரக்கான் படைக்கு நிதி ஆதரவு வழங்கி வந்ததாகவும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு தெரிவித்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்