Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

32ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

சிங்கப்பூர் 32ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தை, இன்று தொடங்கி, வரும் சனிக்கிழமை வரை ஏற்று நடத்தவிருக்கிறது. அந்தக் கூட்டம், ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

வாசிப்புநேரம் -
32ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூரில் இன்று தொடக்கம்

படம்: AFP/Romeo Gacad

சிங்கப்பூர் 32ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தை, இன்று தொடங்கி, வரும் சனிக்கிழமை வரை ஏற்று நடத்தவிருக்கிறது. அந்தக் கூட்டம், ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு, சிங்கப்பூர் ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதால், பிரதமர் லீ சியென் லூங், அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். இவ்வாண்டு, சிங்கப்பூர் தலைமையேற்று நடத்தும் முதல் ஆசியான் உச்சநிலைக் கூட்டம் அது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்கள், ஆசியானின் முன்னுரிமைகள் பற்றியும், அது சந்திக்கும் சவால்கள், அதற்குரிய வாய்ப்புகள் முதலானவை பற்றியும் கலந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் தனது மீள்திறனையும் புத்தாக்கத்தையும் வலுப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவதை ஒட்டி அந்தக் கலந்துரையாடல்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்