Images
  • sg covid (30)
    (கோப்புப் படம்: Marcus Mark Ramos)

சமூக அளவில் நேற்று கிருமித்தொற்று உறுதியான இருவருக்கு எப்படி கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை

சிங்கப்பூரில் சமூக அளவில் நேற்று, நால்வருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் இருவருக்கு, எவ்வாறு கிருமி தொற்றியது என்பது தெரியவில்லை.

ஒருவர், Orange Valley தாதிமை இல்லத்தில் பணிபுரியும் 29 வயதுத் தாதிமை உதவியாளர்.

இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவர், கடந்த மாதம் (மே) 14ஆம் தேதி, இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

மற்றொருவர், புக்கிட் மேரா வியூ (Bukit Merah View) சந்தை, உணவங்காடி நிலையத்தில், வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் கடையில் பணிபுரியும் 74 வயது சிங்கப்பூரர்.

அந்த ஆடவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அவர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.  

Top