Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Sinovac-CoronaVac COVID-19 தடுப்புமருந்து, தேசியத் தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும்

சிங்கப்பூரின் தேசியத் தடுப்பூசி திட்டத்தில் Sinovac-CoronoVac தடுப்புமருந்து இணைத்துகொள்ளப்படுவதாக அமைச்சுகளுக்கு இடையிலான COVID-19 பணிக்குழு அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Sinovac-CoronaVac COVID-19 தடுப்புமருந்து, தேசியத் தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும்

(படம்: AFP/Lillian Suwanrumpha)

சிங்கப்பூரின் தேசியத் தடுப்பூசி திட்டத்தில் Sinovac-CoronoVac தடுப்புமருந்து இணைத்துகொள்ளப்படுவதாக அமைச்சுகளுக்கு இடையிலான COVID-19 பணிக்குழு அறிவித்துள்ளது.

mRNA தடுப்பூசிகளைப் பெற தகுதிபெறாதவர்கள் இனி Sinovac தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சுகாதார அறிவியல் ஆணையம், அந்தத் தடுப்பு மருந்தின் பயன்பாட்டுக்கு இடைக்கால ஒப்புதல் வழங்கியுள்ளது.

Sinovac தடுப்புமருந்தின் செயல்திறன், mRNA தடுப்பூசிகளைக் காட்டிலும் குறைவு என்பதால் அதனை 3 முறை போடவேண்டியிருக்கும்.

mRNA தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டவர்கள், Sinovac தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Sinovac தடுப்புமருந்தை இரண்டாவது முறை போட்டுக்கொண்ட 4 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கருதப்படுவார்.

புதிய அறிவிப்பைத் தொடர்ந்து Sinovac தடுப்புமருந்துக்கான தேவை அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

தேவையைச் சமாளிக்க, கூடுதலான தடுப்பூசிகளை வரவழைக்கும் பணி நடந்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

Sinovac தடுப்புமருந்து இனி இலவசமாக வழங்கப்படும்.

அது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் போடப்படமாட்டாது என்றும் கூறப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்