Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் இளையர்கள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்கின்றனர்: கருத்தாய்வு

இன்றைய சிங்கப்பூர் இளையர்கள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாக மெர்டேக்கா தலைமுறையினரும், 1980-களில் இருந்து 1996-ஆம் ஆண்டு வரை பிறந்த மில்லெனியல் (Millennials) பிரிவினரும் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் இளையர்கள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்கின்றனர்: கருத்தாய்வு

படம்: AFP

இன்றைய சிங்கப்பூர் இளையர்கள் மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாக மெர்டேக்கா தலைமுறையினரும், 1980-களில் இருந்து 1996-ஆம் ஆண்டு வரை பிறந்த மில்லெனியல் (Millennials) பிரிவினரும் கூறுகின்றனர்.

சிங்கப்பூரில் இளையர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தைக் கண்டறிய நடத்தப்பட்டட கருத்தாய்வில் அது தெரியவந்தது.

சிங்கப்பூர் தேசியக் கூட்டுறவுச் சம்மேளனம் முதல்முறையாக அந்தக் கருத்தாய்வை நடத்தியது.

சுமார் 500 மெர்டேக்கா தலைமுறையினரும் மில்லெனியல் பிரிவினரும் இவ்வாண்டின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் பங்கேற்றனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது சுலபமாக இருப்பதாய் மில்லெனியல் பிரிவினரில் மூன்றில் இருவர் குறிப்பிட்டனர்.

மெர்டேக்கா தலைமுறையினரின் இளமைக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை மேம்பட்டுள்ளது.

மெர்டேக்கா தலைமுறையினர் தங்கள் இளமைக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வதும் மில்லெனியல் பிரிவினருக்கு மேலும் எளிமையாகவும் கட்டுப்படியானதாகவும் இருப்பதைக் கருத்தாய்வின் முடிவுகள் சுட்டின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்