Images
  • lions
    (படம்: Facebook/Mandai Wildlife Reserve)

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் ஆப்பிரிக்கச் சிங்கங்களின் காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்

சிங்கப்பூர் விலங்குத் தோட்டத்தில் உள்ள ஆப்பிரிக்கச் சிங்கங்களின் காட்சியகம் நாளை (27 நவம்பர்) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சிங்கங்கள், இம்மாதத் தொடக்கத்திலேயே கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் கூறியது.

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிங்கக் கூட்டம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கங்கள் அனைத்தும் அறிகுறிகள் ஏதும் வெளிப்படுத்தாத நிலையில், அவற்றுக்கான தனிமைப்படுத்தும் உத்தரவு நீக்கப்பட்டது.

இந்நிலையில், இரவுநேர விலங்குத் தோட்டமான Night Safari- இல் உள்ள Asiatic வகைச் சிங்கங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றிடம் மிதமான அறிகுறிகள் தொடர்ந்து அடையாளம் காணப்படுவதாகக் கூறப்பட்டது.

Night Safari-இல் Asiatic வகையைச் சேர்ந்த 9 சிங்கங்களும், விலங்குத் தோட்டத்தில் ஆப்பிரிக்க வகையைச் சேர்ந்த 5 சிங்கங்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டன.

Top