Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில் பங்கேற்ற சிங்கப்பூர் இளையர்

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மின்னியல் பொருள்களை அறிமுகம் செய்ய நிறுவனங்கள், பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியைத் தளமாகப் பயன்படுத்துகின்றன.

வாசிப்புநேரம் -

புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மின்னியல் பொருள்களை அறிமுகம் செய்ய நிறுவனங்கள், பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியைத் தளமாகப் பயன்படுத்துகின்றன.

Samsung, LG, Hyundai, Panasonic என உலகெங்கும் பெயர்போன நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ஆண்டுதோறும் கண்காட்சியின் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்கின்றன.

அவற்றுக்கு இடையே Newton's Meter என்ற சிறிய நிறுவனமும் தனிப்பட்ட பாதுகாப்புச் சாதனத்தைக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

அந்தச் சாதனத்தை உருவாக்கியது சிங்கப்பூரைச் சேர்ந்த சித்தார்த் மஸும்தர். கண்காட்சிக்குள் நுழைய குறைந்தது 18 வயதாவது இருக்கவேண்டும். ஆனால், சித்தார்த்துக்கோ வயது 16.

விதி விலக்காகத் தம் தந்தை உதவியுடன் கண்காட்சிக்குள் நுழைந்த சித்தார்த், தாம் உருவாக்கிய மின்னியல் பொருளை அறிமுகப்படுத்தினார்.

'கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது' என்ற பழமொழிக்கு ஏற்ப சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவரான அந்த இளையர், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து உலக மேடையில் மின்னியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்